in

திருக்கார்த்திகை தீப திருவிழா 1008 சங்கு அபிஷேகம்

திருக்கார்த்திகை தீப திருவிழா 1008 சங்கு அபிஷேகம்

 

திருக்கார்த்திகை தீப திருவிழா மூன்றாம் நாள் அண்ணாமலையார் கோவிலில் 1008 சங்கு அபிஷேகம்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 1008 சங்கு அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவிலில் கருவறை முன்பாக 1008 சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டு நெல் மணிகளை பரப்பி அதன்மீது சங்குகள் வைக்கப்பட்டது.

 

இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க 1008 சங்கு அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து சங்கில் வைத்து பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை உச்சி கால பூஜையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What do you think?

சமூக நல ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகார்

விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை