in ,

அபுதாபியில் முதல் இந்து கோவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்


Watch – YouTube Click

அபுதாபியில் முதல் இந்து கோவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

 

அபுதாபியில் முதல் இந்து கோவில் பிப் 14 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட்

அபுதாபியில் முதல் இந்து கோவில் பிப்ரவரி 14 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இஸ்லாமிய நாடான அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயிலை பிப்ரவரி 14 ம் தேதி அன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் முதல் பாரம்பரிய இந்து கோவிலான BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவில் கட்டப்பட்டு வருகின்றது.

கோவிலின் சிறப்புகள்

இந்த கோவில் துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் உள்ள அபு முரைக்காவில் 27 ஏக்கர் இடத்தில் அமைந்துள்ளது. இந்த மந்திர் 32.92 மீட்டர் (108 அடி), 79.86 மீட்டர் (262 அடி) நீளம் மற்றும் 54.86 மீட்டர் (180 அடி) அகலத்தில் உள்ளது.

அபுதாபி கோயிலின் சிற்ப வேறுபாடுகள், நுணுக்கமான கைவினை திறன்கள், கலை வேலைப்பாடுகள், பளிங்கு கற்களால் ஆன வேலைப்பாடுகள் என 27 ஏக்கர் நிலப்பரப்பில் பரவி இருக்கும் இந்து கோவில், மிகப்பிரம்மாண்டமாக அபுதாபியில் கட்டப்பட்ட முதல் கோவிலான இதனை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பிப்ரவரி 14ம் தேதி திறந்து வைக்க்க உள்ளார்

இதில் உள்ள சிற்ப வேறுபாடுகள், நுணுக்கமான கைவினை திறன்கள், ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட மணல் கற்களால் ஆன கலை வேலைப்பாடுகள், பளிங்கு கற்களால் ஆன வேலைப்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.

ராஜஸ்தானில் இருந்து மணல் கற்கள் கொண்டு செல்லப்பட்டு, அதை கொண்டு கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்ட பளிங்கு கற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழு நாடுகள் உள்ளன. அதைக் குறிக்கும் வகையில் ஏழு கோபுரங்கள் இந்த கோவிலில் உள்ளன. இது தவிர குவி மாடங்களும் எண்ணற்ற தூண்களும் உள்ளன. தூண்களில் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, சிவபுராணம் ஆகியவற்றின் கதைகளை விவரிக்கும் காட்சிகள் தத்ரூபமாக சிற்பங்களில் செதுக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 2015 இல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் அபுதாபியில் இந்து மந்திர் கட்டுவதற்கு நிலம் வழங்கும் முடிவை அறிவித்தது. அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இந்த மந்திருக்காக நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார். 2019 டிசம்பரில் மந்திர் கட்டத் தொடங்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் இஸ்லாமிய நாடான துபாயின் அபுதாபி பகுதியில் முதன்முறையாக கட்டப்படும் இந்து கோவிலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அமீரகத்தின் மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் மற்றொரு மைல்கல்லாக அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இந்துக்களுக்கென்று ஒரு பிரத்யேக இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.


Watch – YouTbe Click

What do you think?

இஸ்லாமியர்களை குறிவைக்கும் பொது சிவில் சட்டம்

புதுச்சேரியில் வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்ற பால் வைத்து பாசத்தைக் காட்டிய பொதுமக்கள்