in

புதுச்சேரி.100 அடி சாலை சுரங்கப்பாதையில் இடுப்பளவிற்கு தேங்கிய தண்ணீர் வாகன ஓட்டிகள் அவதி…

புதுச்சேரி.100 அடி சாலை சுரங்கப்பாதையில் இடுப்பளவிற்கு தேங்கிய தண்ணீர் வாகன ஓட்டிகள் அவதி…

புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள ரயில்வே கிராஸ் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டி களுக்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

சிறிய மழைக்கு கூட இந்த பாலத்தில் மழை நீர் தேங்கி விடும்.இரு தினங்களுக்கு முன் பெய்த மழை காரணமாக சுரங்கப்பாதையில் இடுப்பளவிற்கு
தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதனால் சுரங்க பாதை வழியாக மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடுமையாக அவதி அடைகின்றனர்.

உடனடியாக தண்ணீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்… சிறிய மழைக்கு கூட தேங்கும் நீரை உடனே அகற்றினால் போக்குவரத்து தடையின்றி செல்ல முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

What do you think?

நாகூர் ஆண்டவர் தர்கா 470-வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!

முருகன் பாடல் பாடும் சிறுமி தியாவுக்கு அமைச்சர் வீடியோ கால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து!