நாமக்கல் பொத்தனூர் பச்சமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்!
நாமக்கல் மாவட்டம் – பரமத்தி வேலூர் – பொத்தனூர் – மேற்கு வண்ணாந்துறையில் உள்ள பச்சைமலையின் மேல் உள்ள அருள்மிகு ஶ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு நேற்று முதல் நாள் மாலை மூலவர் மற்றும் உற்சவர் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுவாமியினை பச்சை மலையினை சுற்றி கிரிவலம் அழைத்து வந்தனர். அதன் பிறகு ஊஞ்சலில் வைத்து பள்ளியறை பூஜை சிறப்பாக நடைபெற்றது விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கி அன்னதானம் நடைபெற்றது.


