கோவில் திருப்பணி முதல் கட்ட பணி தொடக்கம்
நாமக்கல் அடுத்த மேதரமா தேவியில் அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டியம்மன் கோவில் திருப்பணி முதல் கட்ட பணி தொடக்கம்
ஸ்டேன் வென்சர்ஸ் குழுமத்தின் சார்பில் ரூ.11 லட்சம் நிதி உதவி வழங்கல் அம்மாவின் ஆணை இந்த கோவிலை கட்டுவது எனது கடமை
சைத்ரா குடும்பத்தின் தலைவர் பிரதீப் குமார் பேச்சு
ஸ்டேன் வென்சர்ஸ் மற்றும் சைத்ரா அறக்கட்டளையின் தலைவர் ஆர். பிரதீப்குமார் செயல்பட்டு வருகிறார்.
இவர் பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக நவம்பர் 5ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முத்துகாப்பட்டி அருகிலுள்ள மேதரமா தேவியில் அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டியம்மன் கோவில் கட்டப்பட உள்ளது.
அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் கோவில் கட்டுமான பணிக்காக நிலம் வாங்கும் பணி முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது இதற்காக ஸ்டேன் வென்சர்ஸ் மற்றும் சைத்ரா அறக்கட்டளையின் தலைவர் பிரதீப் குமார் ரூ.11 லட்சத்திற்கான காசோலையை ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கோவில் நிர்வாக குழுவிடம் ஒப்படைத்ததோடு தொடர்ந்து கோவில் கட்டுமானத்திற்கான திருப்பணியையும் தொடங்கி வைத்தார்.
இதனை அடுத்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு இடையே பிரதீப் குமார் மேதரமாதேவி பொது மக்களிடையே உரையாற்றும் போது
அருள்மிகு ஸ்ரீ பெரிய காண்டியம்மன் கோவில் கட்டும் பணிக்கு அம்மன் கட்ட அனுமதி வழங்கியுள்ளார் நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த இந்த கோவில் திருப்பணி விரைவில் நடைபெறும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதீப்குமார் ஸ்ரீ பெரிய காண்டி அம்மன் எனக்கு இந்த கோவில் கட்ட அனுமதி அளித்தது மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன் என்றும் இந்த ஆலயம் மிகப்பெரிய அளவில் கட்டப்படும் என்றும் மேதரமாதேவியின் பொதுமக்களின் விருப்பப்படியே இந்த கோவில் கட்டப்படும் என்ற கூறினார்.

இந்தக் கோவில் கட்டும் பணி அம்மா போட்ட ஆணை மேதரமா தேவியின் பொதுமக்களின் ஆசிர்வாதத்தோடு இந்த கோவில் மிகப் பிரமாண்டமாக உருவாக உள்ளது அதற்கான முழு சேவையும் நான் செய்வேன் என கூறினார்.
மேதரமா தேவியின் பொது மக்களின் தூய எண்ணத்தினால் தான் இந்த கோவில் கட்ட காரணமாக அமைந்ததாக கூறிய பிரதீப் குமார் இந்தக் கோவில் கட்டப்படும் வேண்டும் என்பது அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டி அம்மனின் ஆணை அது எனது கடமை என கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதீப் குமார் இந்த ஆலயம் சிறப்பாக கட்டப்படும் என்றும் அதற்கான அனைத்து உதவிகளையும் நானும் எனது நிறுவனமும் எனது குழுவினரும் செய்வார்கள் என பேசி தனது உரையை முடித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் அசோக் மற்றும் கவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து அருள்மிகு ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் கோவில் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் ஸ்டென்வென்சர்ஸ் மற்றும் சைத்ரா நிறுவன தலைவர் பிரதீப்குமாருக்கு கோவில் நிர்வாக குழு சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


