in

பொத்தனூர் பச்சை மலை கிரிவலப் பாதையில் உழவாரப்பணி

பொத்தனூர் பச்சை மலை கிரிவலப் பாதையில் உழவாரப்பணி

 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பொத்தனூர் பச்சை மலை, பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமியுடன் கூடிய ஐப்பசி 25.10.26 அன்று ஈரோடு நால்வர் உழவாரப் திருப்பணி அன்பர்கள் பச்சை மலை மற்றும் மலையினை சுற்றி உள்ள கிரிவலப் பாதையில் உழவாரப்பணி சிறப்பாக நடைபெற்றது..

இதில் 150 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் அடியார் பெருமக்கள் கலந்து கொண்டு மலை மற்றும் கிரிவலப் பாதையினை தூய்மை செய்தனர் பின்பு ஆலயத்தில் வெள்ளை அடித்தல் வர்ணம் பூசுதல் சுவாமி சிலைகள் விக்ரகங்கள் மற்றும் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்தல் கிரிவலப் பாதையில் உள்ள காய்ந்த மற்றும் முட்களை அகற்றுதல் போன்ற பணிகள் காலை முதல் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது.

பின்பு முலவர் பால தண்டாயுதபாணி சுவாமிக்கு பலகை வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை முதல் மாலை வரை அருட்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்களுடன் ஈரோடு பெருமக்கள் நால்வர் பெருமக்கள் உழாவாரப்பணி குழு உறுப்பினர்கள் ஆன சிவ.திரு. துரைசாமி ஐயா. சிவ.திரு.சக்தி வேல் ஐயா. சிவ.திரு.நல்ல சிவம் ஐயா மற்றும் சிவ.திரு.ஆனந்த் ஐயா ஆகியோர் விழா ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

Casino mit Kreditkarte Deutsch: Ein Leitfaden für Online-Spieler

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகல தொடக்கம்!