in

பேரிகார்டு அமைத்துக் காவல்துறையினர் தீவிர எச்சரிக்கை

பேரிகார்டு அமைத்துக் காவல்துறையினர் தீவிர எச்சரிக்கை

 

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் காலை முதல் அனுமதி: பேரிகார்டு அமைத்துக் காவல்துறையினர் தீவிர எச்சரிக்கை! “சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடல்; எச்சரிக்கையுடன் செல்லுங்கள்” என போலீஸ் நேரடி அறிவுறுத்தல்!

திண்டுக்கல் மாவட்டத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சூழலில், கொடைக்கானல் செல்ல இன்று காலை முதல் மலைப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இருப்பினும், பழனி – கொடைக்கானல் ரோட்டில் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், கொடைக்கானலில் அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் செல்லுமாறு வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கொடைக்கானல் மலைப்பாதையில் இரவு நேரப் பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன.

​இதன் காரணமாக, கொடைக்கானல் சுற்றுலா செல்வதற்காக சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்றிரவு பழனி வழியாக வந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

​இந்நிலையில், இன்று காலை 7 மணிக்குப் பிறகு சூழல் ஆய்வு செய்யப்பட்டு, அடிவாரத்தில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

​பழனி – கொடைக்கானல் ரோட்டில் காவல்துறையினர் பேரிகார்டுகள் அமைத்து தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது வாகன ஓட்டிகளிடம் போலீசார் பேசுகையில், “தொடர் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்; கொடைக்கானலில் உள்ள அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் 2 நாட்களுக்கு முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

அங்கு சுற்றிப் பார்ப்பதற்கு எதுவுமே திறக்கப்படவில்லை. நீங்கள் வந்ததற்காக உங்கள் சொந்த விருப்பத்திலும் திருப்திக்காகவும் செல்கிறீர்கள்; எனவே எங்கும் அனாவசியமாக நிற்காமல், பாதுகாப்பாகச் சென்று திரும்புங்கள்” எனத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர்.

What do you think?

மயிலாடுதுறையில் தேசிய ஆயுஷ் மாநாடு!

அர்னாப் புயல் எதிரொலி: பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்