மதுரையில் மழையில் நனைந்துகொண்டிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயின்கோட் வழங்கிய சமூக ஆர்வலர்
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அப்போது பல்வேறு பகுதிகளிலும் சாலையோர வியாபாரங்களில் ஈடுபடும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மழையில் நனைந்தபடி சிரமமடைந்துவந்தனர்
இதனை பார்த்த சமூக ஆர்வலரான நெல்லை பாலு என்பவர் உடனடியாக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை அழைத்து ரெயின்கோட் வழங்குவதாக கூறியுள்ளார். அதன்படி இன்று காந்தி அருங்காட்சியகத்தில் 50க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரெயின்கோட்களை வழங்கினார்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மழை காலங்களில் குடைகளை எடுத்துசெல்வதால் அவர்கள் தடுமாறுவது ,மற்றவர் மீது மோதுவது போன்ற நிலைமை ஏற்படும் என்பதால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை கேட்டு மழைகாலத்திற்கான ரெயின் கோட்டை வழங்கியதற்கு சமூக ஆர்வலருக்கு மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய மாற்றுத் திறனாளிகள்
நாங்கள் சாலையோர வியாபாரம் செய்து போது மழையில் நனைந்தபடி செய்தோம் இதனை பார்த்து எங்களுக்கு ரெயின் கோட் வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது
இதுவரை நாங்கள் ரெயின் கோட் பயன்படுத்தியதே இல்லை முதல்முறையாக எங்களுக்கு கொடுத்துள்ளார். நாங்கள் குடைகளை எடுத்துச் செல்லும் போது அது மற்றவர்கள் மீது இடிப்பது போன்ற நிலை ஏற்படும் இதனால் தங்களால் குடை பயன்படுத்த முடியாத நிலையில் எங்களுக்கு ரெயின்கோட் வழங்கியது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர்

