in

நாகை மாவட்டம் எரவாவாஞ்சேரியில் கால்நடை மருத்துவ முகாம்


Watch – YouTube Click

நாகை மாவட்டம் எரவாவாஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை உரிமையாளர்கள் பயனடைந்தனர்

நாகை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக திருமருகல் ஒன்றியம் எரவாவாஞ்சேரி ஊராட்சியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் கால்நடை பராமரிப்பு பயிற்சி நடைபெற்றது. இம்முகாம் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில், கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பட்டன. முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

பழனி திருக்கோவில் விவகாரம் தீர்ப்புக்கு எதிராக மீண்டும் மனு