in

விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்


Watch – YouTube Click

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்கும் வகையில் புதுச்சேரி மாநில விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்

நடிகர் விஜய் ரசிகர் மன்றங்கள் விஜய் மக்கள் இயக்கமாக அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தனர்.

மேலும் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர்.

தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக அதாவது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அதன் தலைவர் விஜய் இன்று அறிவித்தார்.

இதனை வரவேற்று கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்ற மாநில தலைவர் சரவணன் தலைமையில் அண்ணா சிலை அருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினார்கள்.

மேலும் 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று கூடி விஜயின் கட்அவுட் கையில் பிடித்தபடி வருங்கால முதல்வர் தளபதி விஜய் வாழ்க என்று கோஷமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தொடர்ந்து விஜய் கட்சியை மாநில முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் மாநில முழுவதும் பேரணியாக வலம் வந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

விஜய் கட்சி அறிவிப்பு சட்டமன்ற தேர்தலில் போட்டி

நாகை மாவட்டம் எரவாவாஞ்சேரியில் கால்நடை மருத்துவ முகாம்