மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்
சீர்காழி அருகே மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய். காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் தீவு கிராமத்தை சேர்ந்தவர் ஞானசேகரன் இவர் செங்கல் அறுக்கும் கூலித்தொழிலாளி.
ஞானசேகரன் அவரது மனைவி தமிழரசியும் முல்லையம்பட்டினம் கிராமத்தில் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது அவரது மகன் அருகில் தனியாக விளையாடி கொண்டிருக்கும் பொழுது அவ்வழியே வந்த தெருநாய் சிறுவனை கடித்துள்ளது.
இதில் சிறுவனுக்கு வயிறு மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த ஞானசேகரன் சிறுவனை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.