🙏🌺 தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்!
ஐப்பசி மாத அம்பு போடுதல் லீலையை நிகழ்த்துவதற்காக தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகரை கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக இருந்து வரக்கூடிய வேளையிலே நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற முடிந்தது அதனைத் தொடர்ந்து விஜயதசமி நேற்று முடிந்த நிலையிலே , சுந்தர்ராஜ பெருமாள் என்று அழைக்கக்கூடிய கள்ளழகர் அம்பு போடுதல் நிலை இன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது
சித்திரை மாதம் வைகை ஆற்றிலே எழுந்தருள்வதற்காக தல்லாகுளம் பகுதியில் இருந்து தங்கக் குதிரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் கள்ளழகர் இன்று அம்பு போடுதல் லீலையை நிகழ்த்துவதற்காக கோவில் வளாகத்தில் இருந்து தங்கக் குதிரைகள் புறப்பட்டு , அழகர் கோவில் காவல் தெய்வமாக இருக்கக்கூடிய 18-ஆம் படி கருப்பண சுவாமியின் சன்னதியில் தீபாராதனைக்கு பிறகு கோவில் கோட்டைச் சுகருக்கு வெளியே உள்ள அம்பு போடுதல் மண்டபத்திற்கு வருகை தந்தார்
தொடர்ந்து மண்டபத்தில் நடைபெற்ற விசேஷ பூஜைகள் திவாராதனைக்கு பிறகு மண்டபம் எதிரே உள்ள வன்னி மரத்தை சுற்றி அம்பு போடுதல் நிலையத்தை நிகழ்த்தினார்
அம்பு போடுதல் லீலைக்கு பிறகு மீண்டும் பக்தர்களுக்கு தங்கக் குதிரை வாகனத்தில் காட்சியளித்தவாறு திருக்கோவிலில் இருக்கக்கூடிய இருப்பிடம் நோக்கி சென்றார் கள்ளழகர்


