🙏🌺 குறிஞ்சிப்பாடி அருகே சிவன் – பார்வதி திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!
குறிஞ்சிப்பாடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூவாடைகாளியம்மன் ஆலயத்தில் சிவன் – பார்வதி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த ஆயிப்பேட்டை கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ பூவாடைகாளியம்மன் ஆலயத்தில் சிவன் பார்வதி திருகல்யாணம் சிறப்பானக நடைபெற்றது.

ஸ்ரீபார்வதி தேவிக்கு மண பெண் அலங்காரம் செய்து, மண பெண் வீட்டு சீர்வரிசையுடன் அலங்கார வண்டியில் மங்கல இசையுடன் ஊர்வலமாக அழைத்து வரபட்டது. ஊர்வலமாக அழைத்து வரபட்ட மணபெண்ணை வரவேற்கும் விதமாக வாராயோ தோழி வாராயோ என்ற படல்கள் இசைக்க மணபெண்ணுக்கு வரவேற்பு அளிக்கபட்டது.

அதனை தொடர்ந்து ஸ்ரீ பூவாடை காளியம்மன் ஆலயத்தில் புது மாப்பிள்ளை கோலத்தில் இருந்த ஸ்ரீ சிவபெருமான் மற்றும் ஸ்ரீ பார்வதி அம்பாளுக்கும் வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் திருமணம் செய்து வைத்தனர்.
இந்த திருமண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து திருகல்யாணத்தை கண்டு மகிழ்ந்து ஸ்ரீ சிவன் பார்வதியிடம் ஆசிபெற்றனர்.


