in

விருத்தாசலம் ஆற்றில் மருத்துவக் கழிவுகள்? பொதுமக்கள் அதிர்ச்சி!

விருத்தாசலம் ஆற்றில் மருத்துவக் கழிவுகள்? பொதுமக்கள் அதிர்ச்சி!

 

விருத்தாச்சலம் அருகே ஆற்றில் குவிந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான ஊசிகள், காலாவாதியான மருந்துகள், ரத்த பரிசோதனை மாதிரிகள்.

ஆற்றில் கொட்டப்பட்டது மருத்துவ கழிவுகளா? அல்லது போதை ஊசிகளா? என பொதுமக்கள் அச்சம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள வெள்ளளாற்றின் குறுக்கே, உயர்மட்ட மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள, ஆற்று படுக்கையில், ஆயிரக்கணக்கான ஊசிகள், சிரஞ்சுகள், காலாவதியான மாத்திரைகள், நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், என அனைத்தும், குவியல் குவியலாக சிதறி கிடைக்கின்றன.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவது மட்டுமில்லாமல், சிறுவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லக்கூடிய கால்நடைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், காலாவதியான மாத்திரைகள் மற்றும் ஊசிகளை, அழிக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை நிர்வாகம் கூறியிருந்த நிலையில், இதுபோல் மக்களுக்கும் மற்றும் சுகாதாரத்திற்கும் சீர்கேடு ஏற்படும் வகையில், மருத்துவ கழிவுகளை கொட்டி விட்டு சென்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் சம்பந்தப்பட்ட ஆற்று படுக்கையில், பயன்படுத்தப்பட்ட ஏராளமான ஊசிகள் கிடப்பதால், இளைஞர்கள் தவறான முறையில், ஊசிகளை பயன்படுத்திவிட்டு போட்டு செல்கின்றனரா? என்பது குறித்தும் மாவட்ட சுகாதாரத் துறை நிர்வாகம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

உடனடியாக கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு, ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

What do you think?

அரசியலமைப்பு சட்ட தினம் மாலை அணிவித்து மரியாதை

சக்கரப்பட்டி சித்தர் ஆலயம் 14-ம் ஆண்டுகுருபூஜை விழா