in

என்எல்சி நிறுவனம் அலட்சியம் வாகன ஓட்டிகள் அவதி

என்எல்சி நிறுவனம் அலட்சியம் வாகன ஓட்டிகள் அவதி

 

நெய்வேலி என்எல்சி நிறுவனம் அலட்சியமாக செயல்படுவதால், வாகன ஓட்டிகள் ஒவ்வொருவராக கீழே விழுந்து காயம் ஏற்படும் அவலம்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மந்தாரக்குப்பம் புதிய பேருந்து நிலையம் வழியாக, நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளது.

இந்த சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதால், என்எல்சி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் என அனைவரும், கனரக லாரிகள் மூலம் நிலக்கரி கொண்டு செல்லப்படும் பாதை வழியாக, திருப்பி விடப்பட்டுள்ளனர்.

அவ்வாறு வாகன ஓட்டிகள் செல்லும் பாதையில் என்எல்சி நிர்வாகம், சாலை முழுவதும் தண்ணீரைக் கொண்டு அடித்துள்ளது. இதனால் என்எல்சி நிறுவனத்திற்கு வேலைக்கு செல்லக்கூடிய ஊழியர்கள், நெய்வேலி டவுன்ஷிப்பில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி செல்லக்கூடிய மாணவர்கள் இருசக்கர வாகன மூலம் பெற்றோர்கள் அழைத்துச் செல்லும்போது, சாலையில் வழவழப்பு தன்மை உள்ளதால், ஒவ்வொரு இருசக்கர வாகனமும் கீழே விருந்து விபத்துக்குள்ளாகி  வருகிறது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமில்லாமல், வாகன ஓட்டிகள் செல்வதற்கு கடும் அச்சமடைந்து வருகின்றனர். நெய்வேலி என்எல்சி நிர்வாகம், பள்ளி கல்லூரி மாணவர்கள் மீதும் என்எல்சி ஊழியர்கள் மீதும் அக்கறை இல்லாமல், கடமைக்காக சாலையில் தண்ணீரை தெளித்ததால் தற்போது அதிக விபத்து ஏற்பட்டு வருவதால் என்எஸ்சி நிர்வாகத்தின் மீது கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது.

What do you think?

கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் சிறப்பு யாக பூஜை

புதுச்சேரியில் சென்னை ஐஐடி கேம்பஸ் அடிக்கல்