in

நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் சிசிடிவி வீடியோ காட்சி

நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர் சிசிடிவி வீடியோ காட்சி

 

நெய்வேலி அருகே நிலக்கரி ஏற்ற வந்த, கனரக லாரி – இருசக்கர வாகனம் மோதி விபத்து!

இளைஞர் நூலிழையில் உயிர் தப்பும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து, ரோமாபுரி கிராமத்தின் வழியாக, நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், நிலக்கரி ஏற்றுவதற்காக இரவு பகலாக வந்து செல்கின்றன.

அவரு கனரக வாகனங்களை ஓட்டக் கூடிய ஓட்டுநர்கள் அதிவேகமாக சாலையில் செல்வதாலும், நிலக்கரி துகள்களை சிதறி விட்டு, பொதுமக்கள் வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நிலக்கரி ஏற்ற வந்த கனரக லாரியின், ஓட்டுநர், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை கவனிக்காமல், அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் லேசான காயமடைந்து நூலிழையில் உயிர் தப்பினார். இது குறித்த சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர் வேப்பங்குறிச்சியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் யுவராஜ் என்பது தெரியவந்துள்ளது..

இருசக்கர வாகனம் வந்ததை, கவனிக்காமல் லாரியை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் யுவராஜின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டதால், விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல், NLC நிறுவனத்தின் உள்ளே ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த மந்தாரக்குப்பம் போலீசார் விசாரிக்க முற்பட்டபோது, ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், அங்கிருந்த லாரி உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மூலம் ஓட்டுநர் பின்னர் அழைத்து வரப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What do you think?

காவல்துறையினர் அலட்சியம் விவசாயிகள் சாலை மறியல்

ஐப்பசி வியாழன் தட்சணாமூர்த்தி அபிஷேக ஆராதனை வழிபாடு