in ,

விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரேமலதா விஜயகாந்த்!

விருத்தாசலம் அருகே பள்ளி மாணவர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரேமலதா விஜயகாந்த்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க ஒரு நாள் சுற்றுப்பயணமாக வந்த தேமுதிக பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களிடம் குறை நிறைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக விருத்தாசலம் அருகே உள்ள ஆலடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற அவர், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார். மாணவர்களிடையே இனிப்புகளையும் வழங்கி உற்சாகப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

போலி கல்விச் சான்றிதழ் தயாரித்து ரூ.33.27 லட்சம் மோசடி – 5 பேர் மீது வழக்குப்பதிவு!

மேகமலை மக்களுக்கு உச்சநீதிமன்ற உத்தரவால் பெரும் நிம்மதி