in

சிதம்பரத்தில் ரூ 259 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள்


Watch – YouTube Click

சிதம்பரத்தில் ரூ 259 கோடி செலவில் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள்

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும், முடிவடைந்த பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும் சிதம்பரம் நகராட்சி அலுவலகம் அருகே நடந்தது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

சிதம்பரம் நகரம், அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் பயன்பெறும் வகையில் ரூ 259 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர். மேலும் வடலூர் நகராட்சி புதிய கட்டிடத்தையும், சிதம்பரத்தில் புனரமைக்கப்பட்ட ஞானப்பிரகாச குளத்தையும் விழாவில் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ 4.28 கோடி, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ 5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம், சுமார் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சிதம்பரம் மேலவீதி மற்றும் தெற்கு வீதிகளில் சாலையின் இரு புறமும் கிரானைட் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர்.

இதையடுத்து வருவாய்துறை, வேளாண்மை?துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் பொதுமக்களுக்கு இலவச மனைப்பட்டா, வீடு வழங்குதல், தனிநபர் கடன், மகளிர்க்கு ஊட்டச்சத்து பெட்டகம், இலவச தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் நேரு மற்றும் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வழங்கினர்.

விழாவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, கடலூர்’ மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் எம்.எல்.ஏ ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது.

முன்பெல்லாம் பேரூராட்சிகளுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியது கிடையாது. ஆனால் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேரூராட்சிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் இதுவரை 544 குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 4 கோடியே 53 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 15 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒரு கோடி பேருக்கு வழங்கப்படும் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த 5 ஆண்டுகள் முடியும் வருவாயில் தமிழ்நாட்டில 7 கோடியே 25 லட்சம் மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்றார்.

மேலும் வேளாண்மைத்துறை அமைச்சர் இந்த மாவட்டத்திற்காக 400 கோடி ரூபாய்க்கு மேல் திட்டங்களுக்கு நிதி கேட்டிருக்கிறார். வேளாண்மைத்துறை அமைச்சரின் துறைக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் எனது துறைக்கு 25 ஆயிரம் கோடிதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என நகைச்சுவை பொங்க அமைச்சர் நேரு பேசினார்.

பின்னர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகுதான் நல்ல பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், இதுபோன்ற குடிநீர் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் பேசினார்.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் பரபரப்பு பேட்டி

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்