in

போலீஸார் வாகனம் மோதி இருவர் காயம் ஒருவர் பலி


Watch – YouTube Click

போலீஸார் வாகனம் மோதி இருவர் காயம் ஒருவர் பலி

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் காட்டுப்புத்தூர் அருகே சீலைபிள்ளையார் புத்தூரில் இரு சக்கர வாகனத்தின் மீது போலீஸார் வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலி. இருவர் காயம் அடைந்தனர்.

காட்டுப்புத்தூர் அருகிலுள்ள சீலைப் பிள்ளையார்புத்தூரில் இரு சமுதாயத்தினரை அவதூராக சித்தரித்து மற்றொரு சமுதாயத்தினர் துண்டு பிரசுரங்கள் ஒட்டியதை கண்டித்து போராட்டம் நடைபெற்றதால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு 50க்கும் மேற்பட்டபோலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் வாகம் ஆற்றம் கரையிலிருந்து சீலைப்பிள்ளையார் பேருந்து நிலையத்தின் அருகே சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது மோதியது.

இதில் இருசக்கர வாகனம் போலீஸார் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டது, இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸார் வாகனத்தை சாய்த்து வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்ட இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் சுமார் 45 மதிக்கத்தக்க பெண் இறந்தார் மற்றொருவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து திருச்சி டிஐஜி மனோகரன் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் இன்ஸ்பெக்டர் முத்தையா முசிறி கோட்டாட்சியர் ராஜன் தொட்டி வட்டாட்சியர் கண்ணா மணி மற்றும் வருவாய் துறையினர் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

3 கடைகளை உடைத்து மூன்றே கால் லட்சம் கொள்ளை

என்னை கொடுமை படுத்திய காதலன்…. யார் அவர்… பதிலளிப்பாரா ஆண்ட்ரியா