in

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு விரைவில் விசாரணை


Watch – YouTube Click

திமுக எம்.எல்.ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு விரைவில் விசாரணை

 

பணிப்பெண்ணை துன்புறுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி ஆன்டோ மதிவாணன் மற்றும் மெர்லினா ஆகிய இருவரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவரை, குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர்.

திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை அதிகளவில் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

வேலை பிடிக்கவில்லை ஊருக்குப் போகிறேன் என கிளம்பிய அந்தப் பெண்ணை அனுப்ப மறுத்து கட்டாயப்படுத்தி தங்க வைத்துள்ளனர். மேலும், பேசியபடி சம்பளத்தை கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் இருவர் மீதும் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவாக இருந்த ஆன்டோ மதிவாணன் மற்றும் மெர்லினாவை அண்மையில் கைது செய்தனர்.

இந்த நிலையில், ஜாமீன் கோரி இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில், பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை எனத் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

இம்ரான் கானுக்கு 10 ஆண்டு ஜெயில்

ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது ஏன்?.. சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த A.R.Rahuman