வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டுப் பறவைகள் வலசை
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கடற்காகங்கள் பல்லாயிர கணக்கில் கோடியை கரைக்கு வலசை வந்துள்ளது கடற்கரை பகுதியில் கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள் காணப்படுகிறது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற ராம்சார் சைட் அங்கீகாரம் பெற்ற
இந்த பறவைகள சரணாலயத்திற்கு. ஆண்டுதோறும் வட துருவ பகுதியில் நிலவும் கடும் குளிரை போக்குவதற்காக அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டுப் பறவைகள் வலசை வருகிறது.
கோடிக்கரை பறவைகள் சரணாலயத்தில் 275 க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் லட்சக்கணக்கில் காணப்படுவதுண்டு. நடப்பாண்டு சீசன் துவங்கி உள்ள நிலையில் நீர் பறவைகள் நிலபறவைகள் அதிக அளவில் வலசை வந்துள்ளது பல லட்சக்கணக்கான பறவைகள் கோடியக்கரையில் தற்சமயம் குவிந்துள்ளன.

இதன் காரணமாக கோடியக்கரை சுற்று வட்டார பகுதிகளில் மரக்கிளைகளில் நில பறவைகளும் பறவைகள் சரணாலய பகுதிகளில் நீர் பறவைகளும் லட்சக்கணக்கில் காணப்படுகிறது குறிப்பாக கெம் லாஸ்ட் பம்பிங் ஸ்டேஷன் கடற்கரை முனியப்பன் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் அதிக அளவில் காணப்படுகிறது.
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய கடல் பகுதியில் இருந்து கடற்காகங்கள் பல்லாயிர கணக்கில் கோடியை கரைக்கு வலசை வந்துள்ளது கடற்கரை பகுதியில் கூட்டம் கூட்டமாக கடற்காகங்கள் காணப்படுகிறது.
கோடியக்கரை கடற் பகுதியில் மீனவர்கள் படகுகளில் மீன் பிடித்து வரும்போது கூடவே கூட்டம் கூட்டமாக வரும் கடற்காகங்கள் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது இந்த கடற் காகங்கள் மீனவர்கள் வலைகளில் இருந்து தூக்கி வீசி மீன்களை கூட்டமாக வந்து இறையாக்கி கொள்கிறது.


