தினக்கூலி தொழிலாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது தனியார் அறக்கட்டளை நிர்வாகம்
இன்றைய பொருளாதார சூழலில் சாமான்ய தினக்கூலி தொழிலாளர்கள் மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு செல்வதே எட்டா கனியாக உள்ள நிலையில், தஞ்சையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் 150 பேரை குடும்பத்துடன் தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தை காண அழைத்து சென்று அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது தனியார் அறக்கட்டளை நிர்வாகம்.
தஞ்சையில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் குடும்பத்துடன் தனுஷ் நடித்த ஓம் திரைப்படம் பார்க்க வேண்டும் என விரும்பினர்.
ஆனால் அவர்களது பொருளாதார நிலை திரையரங்கத்திற்கு சென்று குடும்பத்துடன் திரைப்படம் காண முடியாத சூழல் இருந்தது.
இவர்களது விருப்பத்தை அறிந்த தனியார் அறக்கட்டளை நிர்வாகம் தூய்மை பணியாளர்களை குடும்பத்துடன் ஓம் திரைப்படம் காண அழைத்துச் செல்ல முடிவு எடுத்தது.

அதன்படி தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தில் திரைப்படம் காண டிக்கெட் எடுத்து தூய்மை பணியாளர்களை வீட்டில் இருந்து வாகன மூலம் திரையரங்கம் அழைத்துச் சென்று ஓம் திரைப்படம் காண வைத்து அவர்களது ஆசையை நிறைவேற்றி தந்தனர்.
அதோடு மட்டுமல்லாமல் இடைவேளையின்போது அவர்களுக்கு ஸ்னாக்ஸ் டீ வாட்டர் பாட்டில் ஆகியவை வாங்கி தந்தனர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத தூய்மை பணியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.


