புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் – குறள் சிறப்புச் சொற்பொழிவு.
புதுச்சேரி..திருவள்ளுவரின் புகழைப் போற்றும் வகையில், புதுச்சேரைத் தமிழ்ச் சங்கம் சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல் மற்றும் குறள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது..
புதுச்சேரி, வெங்கட்டா நகர் பகுதியில் உள்ள புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில், மாதமாதம் 20-ஆம் தேதி, திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர்…
இன்று புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் கல்விச் செம்மல் சீனு. மோகன்தாசு வரவேற்புரை ஆற்றினார்.

தொடர்ந்து, முன்னாள் எழுத்தாளரும், மேனாள் பொது மேலாளருமான, பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரி சோம. வீரப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, “மேலாண்மைப் பேராசிரியர் திருவள்ளுவர்” என்ற தலைப்பில் குறள் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
குறள்நெறி நிகழ்வில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு திருக்குறள் நூல் வழங்கப்பட்டது..
தமிழின் பெருமையையும் திருக்குறளின் சிறப்பையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது..
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுவைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
திருவள்ளுவரின் சிந்தனைகளையும், திருக்குறளின் வாழ்வியல் நெறிகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, தமிழார்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


