in

அடுத்தடுத்த ஆபரேஷன்…னால் ஒரு காலில் உணர்வே இல்லாத அஜித்குமார்


Watch – YouTube Click

அடுத்தடுத்த ஆபரேஷன்…னால் ஒரு காலில் உணர்வே இல்லாத அஜித்குமார்

அமராவதி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தல அஜித். ஆனால் இவரின் கலருக்காகவே நார்த் இந்தியன் நடிகர் என்று முத்திரை குத்த பட்டு இவருக்கு சினிமா தமிழ் சினிமா வாய்ப்பு கொடுக்க மறுத்தது.

ஆனால் இவரின் விடாமுயற்சியால் இன்று கோடான கோடி ரசிகர்களுக்கு தலையான நடிகனாக இருக்கிறார் .

ஹீரோ…யிசம் காட்டாமல், பந்தா இல்லாமல் பணம் சம்பாதித்தால் போதும் என்ற கொள்கையை தாண்டி தொழிலை மதிப்பவர்.

நடிகர் அஜித் தற்பொழுது விடாமுயற்சி படத்தில் இருந்து பிரேக் எடுத்து Good Bad Ugly என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரின் தொழில்பக்தியை பற்றி அண்மையில் பேட்டி ஒன்றில் Sundar C. கூறியதாவது.

அஜித்தை வைத்து உன்னை தேடி என்ற படத்தை இயக்கிய போது அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு கால்களில் உணர்வே இல்லை. முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையால் அப்படி ஆகிவிட்டது.

மேலும் உடல் எடையும் கூடி விட்டது நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் அதை நம் மூளை உணரும் ஆனால் அவருக்கு அப்படிப்பட்ட உணர்வே இல்லை அவர் கீழே பார்த்து தான் நடப்பார்.

ஒருநாள் சாலக்குடியில் படப்பிடிப்பு நடத்தினோம் தண்ணீரில் நடந்து செல்ல கூடிய காட்சி. தண்ணீர் ஐஸ் போல ஜில்லுனு இருந்ததால் எங்களால் நடக்க முடியவில்லை ஆனால் அஜித்தோ சாதாரணமாக தண்ணீரில் நடந்து வந்ததார்.

நாங்கள் எல்லோரும் நீங்க ஹீரோ அதுக்காக இப்படியா நடப்பீர்கள் என்று கேட்டு சிரித்ததற்கு அவர் எனக்கு எதுவுமே தெரியவில்லை சார் உணர்வு இருந்தால்தானே என்று கூறினார்.

இவ்வளவு கஷ்டத்தையும் மீறி தான் அவர் சினிமாவில் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார் என்று அஜித்தை பற்றிய சுந்தர்.சி பெருமையாக கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

யுனிசெப்…பின் இந்திய தூதராக தேர்வு செய்யபட்ட நடிகை

சினிமா திரையில் எனக்கு பக்குவம் இல்லை