in

திண்டிவனம் அடுத்த கொள்ளாரில் சட்ட விழிப்புணர்வு முகாம்


Watch – YouTube Click

திண்டிவனம் அடுத்த கொள்ளாரில் சட்ட விழிப்புணர்வு முகாம்

 

திண்டிவனம் அடுத்த கொள்ளாரில் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மத்தியஸ்த சார்பு மையத்தின் சார்பில் கிராம புற மக்களுக்கு சமரச சார்பு மையத்தின் பயன்பாடுகள் குறித்தும், நிலுவை வழக்குகளை சமரச முறையில் தீர்வு காண்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கொள்ளார் ஊராட்சி மன்றத் தலைவர் புண்ணியமூர்த்தி வரவேற்புரையாற்றிய சிந்திகழ்ச்சியில. கூடுதல் மாவட்ட முதலாவது நீதிபதி ரஹ்மான் பல்வேறு சட்ட விழிப்புணர்வுகள் குறித்து தலைமையுரை நிகழ்த்தினார் .

முதன்மை சார்பு நீதிபதி தனம் , முதலாவது குற்றவியல் நீதிபதி எண் கமலா ஆகியோர் சிறப்புரையாற்றினர்கள். பல்வேறு வழக்குகளை சமரசமாக தீர்க்கும் வழிகள் குறித்தும் மக்கள் விழிப்புடன் செயல்பட்டு தங்கள் உரிமைகளை பாதுகாக்கும் முறை குறித்தும் திண்டிவனம் சமரச சார்பு மையத்தில் மத்தியஸ்தர்களாக செயல்படும் பாலசந்தர் , கிருபாகரன் , பாலசுப்ரமணியன் , நாகையா மற்றும் சிவசுப்ரமணியன் ஆகியோர் விளக்கி பேசினர் .
சரஸ்வதி சட்ட கல்லூரி மாணவர்கள் சமரச முறையில் வழக்கை தீர்வு காண்பதால் என்னென்ன பலன்கள் என்பதை விளக்கி மேடை நாடகம் ஒன்றை நடத்தி கிராம மக்களின் பாராட்டை பெற்றனர் .

நிகழ்ச்சிகளை மோணிகா தொகுத்து வழங்கினார் . இதில் சுமார் ஏராளமான பொது மக்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர் . முடிவில் கொள்ளார் ஊராட்சி மன்ற து.தலைவர் ரமேஷ் கலைவாணி நன்றியுரையாற்றினார் .


Watch – YouTube Click

What do you think?

கட்டுமான தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விளவங்கோடு தொகுதி காலி என அறிவிப்பு