in

தர்ஷினியை காப்பாற்றும் தோழர்… திசை திரும்பும் எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோடில்

தர்ஷினியை காப்பாற்றும் தோழர்… திசை திரும்பும் எதிர்நீச்சல் சீரியல் இன்றைய எபிசோடில்

அனைவராலும் விரும்பப்பட்டு தற்போது இல்லத்தரசிகளின் வயிற்றேரிசலை சம்பாதித்து கொண்டிருக்கும் சன் டிவி எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினியை யார் கடத்தினார் என்கிற உண்மையை ரசிகர்கள் ஓரளவிற்கு யூகித்து விட்டார்கள்.

முழுக்க முழுக்க இதற்கு காரணம் குணசேகரன் தான் என்று தெரிந்துவிட்டது. தர்ஷினியை மறைத்து வைத்து ஜீவானந்ததின் மேல் அந்த பழியை போடநினைத்தபோது, மருமகள் நான்கு பேரும் அதற்கு ஏற்ற மாதிரி குணசேகரனை எதிர்த்து தர்ஷினியை தேடி போக ஆரம்பித்தார்கள்.

தர்ஷினி இருக்கும் இடம் தெரிந்து நெருங்கும் நேரத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு குணசேகரன் போன் பண்ணி ஜீவானந்தத்தை அரெஸ்ட் செய்ய சொல்ல. அதற்கு ஏற்றார்போல ஜீவானந்தமும் தர்ஷினியை கண்டுபிடிக்க போலீசாரை அழைக்க . ஜீவானந்ததை விசாரணைக்கு கூட்டிட்டு போய் விடுகிறார்கள்.

பிறகு ஜீவானந்ததின் உதவி இல்லாமல் நான்கு பெண்களும் தர்ஷினி இருக்கும்’ இடத்தை கண்டுபிடிக்க அவர்களையும் போலீஸ் மூலம் குணசேகரன் மடக்கி விட்டார். மொத்தத்தில் தர்ஷினியை கடத்திட்டுப் போய் வைத்தது குணசேகரன் தான் என்று தெரிந்துவிட்டது.

ஆனால் காணாமல் போன தர்ஷினியை தேடாமல் கதையை வேற விதமாக டைரக்டர் திசை திருப்புகிறார், எல்லா சீரியல்களிலும் பெண்ணகளை கொடுமைபடுத்தி இல்லத்தரசிகளின் இரக்கத்தை டச் பண்ணினால் TRP ரேட்டை எகுற வைத்துவிடலாம் என்று நினைத்து லாஜிக்கே இல்லாமல்கதையை நகர்த்தி செல்கிறார் டைரக்டர் திருச்செல்வம்.

நல்லாதானயா போய்கிட்டிருந்தது ஏன் எங்களை சோதிக்கிறீங்க என்று வடிவேலு பாணியில் கேட்க தோன்றுகிறது பெண்களை போலீஸ் ஸ்டேஷன்ல கொடுமை படுத்தி கணவர்களின் மனதை மாற்றுகிரேன் என்று ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துவிட்டார் இயக்குனர், நீங்க உங்கள் ரூட்..டில் கதையை யோசித்தால் நன்று டைரக்டர் சார் மற்ற சீரியல்களை copy அடிகாதீர்கள், ஆனால் இப்படியும் ஒரு மனிதனா என்று நினைத்த கதிர் மாறிவிட்டார் என்பது சற்று ஆறுதலான விஷயம்.

நான்கு பெண்கள் மற்றும் ஜீவானந்தம் விசாரணைக்காக கோர்ட்டில் நிற்கும் பொழுது குணசேகரன் நினைத்தபடி லாயரும் எல்லா தவருக்கும் இவர்கள் தான் காரணம் என்று கூறும் நேரத்தில் தர்ஷினி கோர்ட்டுக்கு ஆஜராகி நடந்த உண்மையை சொல்ல போகிறார்.

தர்ஷினி தோழர் கண்ணுக்கு பட்டதும் அவரைக் காப்பாற்றி கூட்டி வர இந்த கேஸ்சை சாறுபாலா தொடர்ந்து நடத்தப் போகிறார் இனிவரும் நாட்களில் இதுதான் நடக்க போகிறது.

What do you think?

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கோரிக்கை

திருவாரூர்-வெளி மாநில சாராய பாட்டில்களை பறிமுதல்