in

ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் ஆய்வு


Watch – YouTube Click

ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் ஆய்வு,சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்து இடங்களில் கேமரா பொருத்தப்படுகிறது, சீர்காழி வனச்சரக அலுவலர் சம்பவ இடத்தில் தகவல் 

மயிலாடுதுறை நகரில் நேற்று இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டது இது குறித்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் வனத்துறையினர் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் காவல்துறையினர் தீயணைப்புணர் துறையினர் இணைந்து காவிரியின் கிளை ஆறான பழங்காவெரி கரை பகுதி, பால சரஸ்வதி மெட்ரிக் பள்ளியின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி அமைந்துள்ள கீழ ஒத்த சரக்கு பகுதியில் போக்குவரத்திற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்து இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று சம்பவ இடத்தை பார்வையிட்ட சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தெரிவித்துள்ளார். சிறுத்தை இரவில் மட்டுமே நடமாட்டம் அதிகம் உள்ள விலங்கு என்பதால் அதனை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது


Watch – YouTube Click

What do you think?

திருச்சி திருவெறும்பூர் அருகே நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்

துணிகளை தைத்து தையல் கலைஞர்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா