in

பழனி மலை படிக்கட்டுகளில் உடலை வில்லாக வளைத்து நடந்து சிறுவன் சாதனை


Watch – YouTube Click

 

பழனி மலை படிக்கட்டுகளில் உடலை வில்லாக வளைத்து நடந்து சிறுவன் சாதனை

பழனி மலை படிக்கட்டுகளில் உடலை வில்லாக வளைத்து நடந்து சிறுவன் சாதனை- உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றார்

பழனியைச் சேர்ந்த சிவப்பிரகாசம், சிவசங்கரி தம்பதியின் மகன் ரிஸ்வந்த் குமார்(14), நெய்க்காரப்பட்டியில் உள்ள பி.ஆர்.ஜி மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுவன் ரிஸ்வந்த் குமார் யோகா கலையில் பயிற்சி எடுத்து வருகிறான். யோகா கலையின் மீது ஆர்வம் ஏற்பட்டு சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சிறுவன் ரிஸ்வந்த் குமார் பல்வேறு முயற்சிகளில் மேற்கொண்டு வருகிறான்.

அதன் ஒருபகுதியாக பழனி இடும்பன் மலையில் 100 படிக்கட்டுகளை சக்ராசனம் என்று சொல்லக்கூடிய உடலை பின்புறமாக வில்லாக வளைத்து கொண்டு படிக்கட்டில் ஏறி உள்ளான்.

சிறுவன் ரிஷ்வந்த் குமாரின் முயற்சியை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்டு அமைப்பு உலக சாதனையாக பதிவு செய்துள்ளது. உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிறுவர் ரிஸ்வந்த் குமாரை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து யோக கலையில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்த முயற்சி செய்ய உள்ளதாக சிறுவன் ரிஸ்வந்த் குமார் தெரிவித்துள்ளான்.


Watch – YouTube Click

What do you think?

சிவகாசியில், போதை தகராறில் வாலிபர் குத்தி கொலை காவல் நிலையத்தில் சரணடைந்த சிறுவன்

பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து மஞ்சள் பை உபயோகிப்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி