in

தேர்தலில் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் ஆட்சியர் உத்தரவு


Watch – YouTube Click

தேர்தலில் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் ஆட்சியர் உத்தரவு

 

நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

புதுச்சேரி பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அச்சமோ, பதற்றமோ இன்றி வாக்களிக்கும் வகையில் காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட உதவி ஆட்சியர் யஷ்வந்த் மீனா, மாவட்ட துணை தேர்தல் அதிகாரி வினயராஜ், காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்பாக வாக்களிக்கும் விதமாகவும் காவல்துறையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும், மேலும் பிரச்சாரம், பொதுக்கூட்டங்களை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கூட்டத்தில் காவல்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது…


Watch – YouTube Click

What do you think?

போதையில் தள்ளாடி இயக்குனரிடம் வாங்கிகட்டி கொண்ட மாதவன்…

கரூரில் செல்போன் கடையில் செல்போனை திருடி சென்ற சிசிடிவி காட்சிகள்