in

புதுச்சேரி போலீஸார் நடத்திய போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சி


Watch – YouTube Click

புதுச்சேரியில் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு; இளையோரை கவர்ந்த டேக்வாண்டோ, நடனம், சிலம்பாட்டம்; புதுச்சேரி போலீஸார் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி- இளையோர் மட்டுமின்றி குழந்தைகள், பொதுமக்கள்,  சுற்றுலா பயணிகள் என பலரும் பங்கேற்பு.

புதுச்சேரியில் கஞ்சா, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

எனவே அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. மேலும் போதையால் பாதை மாறும் இளைஞர்கள் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதனை தடுக்க புதுச்சேரி காவல்துறையினர் பல்வேறு சோதனைகளும், தீவிர கண்காணிப்பு பணிகளும் மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் போலீசாரால் போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்தநிலையில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே ஒதியஞ்சாலை காவல் நிலையம் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாலை நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டு சிலம்பம், காரத்தே உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தனர். அதேபோல் நடன நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது மாணவர்கள் போதை பொருட்கள் தடுப்புக்கு எதிராக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கண்ணன், ஜெய்சங்கர், கிட்லா சத்தியநாராயணன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்…


Watch – YouTube Click

What do you think?

மனைவி மீது சந்தேகம் – மது மற்றும் கஞ்சா பழக்கத்தால் விபரீதம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை நக்கல் பேச்சி