விவசாயிகள் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷம்
செஞ்சி அடுத்த வல்லத்தில் மத்திய கூட்டுறவு வங்கி எதிரே விவசாயிகள் தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷம்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் மத்திய கூட்டுறவு வங்கி முன் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் விவசாயிகள் ஒன்றினைந்து தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகளுக்கு தேர்தலில் வெற்றி பெற்றால் 5 ஏக்கர் குறைவாக உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருந்த நிலையில்,
தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளின் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு 75 ஆயிரம் மட்டுமே கடனை தள்ளுபடி செய்துள்ள தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த ஐந்து ஏக்கருக்குள் உள்ள அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யபடும் எனவும மேலும் ஐந்து ஏக்கருக்கு மேலே உள்ளவர்களுக்கு 50% விவசாய கடனை தள்ளுபடி செய்வதாகவும் வாக்குறுதி மட்டுமல்ல உத்தரவாதத்தையும் முதல்வர் அறிவித்திருந்த நிலையில், தற்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ள நிலையில்

ஐந்து ஏக்கருக்கு குறைவாக உள்ள அனைத்து விவசாயிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவும் மேலும் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது போல் 5 ஏக்கருக்கு மேலே உள்ள விவசாயிகளில் 50 சதவீத கடன்களை தள்ளுபடி செய்ய கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய கடனால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழக முதல்வர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி கோரிக்கை வைத்தனர்.
விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்பு கூட்டுறவு வங்கி மேலாளரிடம் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர் விவசாயிகளின் போராட்டத்தினால் பரபரப்பு நிலவியது.


