in

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

செஞ்சியில், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வலியுறுத்தியும், பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பேரணியும் நடைப்பெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, நகர, வட்டார மற்றும் துணை அமைப்புகள் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆர். ரங்க பூபதி தலைமை தாங்கினார்.அப்போது, “நீட் தேர்வை ரத்து செய்”, “இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கு” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, வட்டார மற்றும் துணை அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செஞ்சி நான்கு முனை கூட்ரோட்டில் இருந்து திருவண்ணாமலை சாலை வழியாக கண்டன ஊர்வலமாகச் சென்று, தனியார் திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர் ரங்கபூபதி பேசுகையில் நீட் தேர்வால் ஆண்டுகள் தோறும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நீட் தேர்வு பயத்தில் கோபிகா என்ற மாணவி உயிரிழந்தார்.

மேலும் பாஜக அரசு பொறுப்பேற்று இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என தேர்தல் அறிக்கையில் கூறினர். ஆனால் ஐந்து லட்சம் பேர் கூட வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை, மேலும் பாஜக அரசு பொறுப்பேற்று ஒரு தொழிற்சாலை உருவாக்கவில்லை.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முறைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது இதனால் மாணவர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர் எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் ஆனி மாத பௌர்ணமி தின திருவிளக்கு பூஜை

விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலையில் சாலை மறியல்