in ,

ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் 54-வது ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா

ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் 54-வது ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா

செஞ்சியில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் 54-வது ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம்
செஞ்சி – திருவண்ணாமலை சாலையில் உள்ள பி.ஏரிக்கரை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் 54-வது ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா, கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆடி கிருத்திகையை முன்னிட்டு, 108 பால்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து, மூலவர் மற்றும் உற்சவர் ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது இதனைத் தொடர்ந்து, சக்திவேலுக்கு பால் அபிஷேகம், அக்னிச்சட்டி ஊர்வலம், சக்திவேல் வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன

       

மேலும், பால் காவடி மற்றும் பறவை காவடி எடுத்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாகச் சென்றனர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஸ்ரீ வள்ளி தெய்வயானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி, ஜேசிபி லாரி கிரேனில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த ஊர்வலத்தில், நேர்த்திக்கடனாக முதுகில் அலகு குத்தி தொங்கியபடி பக்தர்கள் கலந்து கொண்டனர் அப்போது, “அரோகரா அரோகரா ” என்ற பக்தி முழக்கங்கள் விண்ணை முட்டின விழாவையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானமும் நடைபெற்றத

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, செஞ்சி ஒழுங்குமுறை விற்பணைக்கூட நெல், அரிசி, மணிலா வியாபாரிகள் சங்கம், ஒழுங்குமுறை விற்பணைக்கூட எடைபணி தொழிலாளர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து செய்திருந்தனர்.

What do you think?

 200 கிலோ அன்னம் கொண்டு அன்னாபிஷேக அலங்காரம்

ஸ்ரீ வெற்றிவேல் முருகன் ஆலயத்தில் 18 ஆவது ஆண்டு ஆடி கிருத்திகை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.