பழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை
பழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை – ரூ.3.60 கோடி பக்தர்களால் கிடைக்கப் பெற்றுள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இன்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், ரூ.3 கோடியே 60 லட்சத்து 30 ஆயிரத்து 714 ரொக்கப் பணம் காணிக்கையாக கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும், 635 கிராம் தங்கமும், 9,155 கிராம் வெள்ளியும், 918 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், திருஆவினன்குடி கோயில் உண்டியல் எண்ணிக்கையில் ரூ.37 லட்சத்து 66 ஆயிரத்து 801 ரொக்கம், 24.320 கிராம் தங்கம் மற்றும் 478.300 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.

மேலும், மீனாட்சியம்மன் கோயில் உண்டியலில் ரூ.29 ஆயிரத்து 715 ரொக்கம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
இந்த உண்டியல் எண்ணிக்கை பணியில் கோயில் இணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையில், கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், நாதஸ்வரப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


