in

 கன மழையில் வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

 கன மழையில் வேரோடு சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

 

மயிலாடுதுறையில் அரை மணி நேரம் காற்றுடன் பெய்த கன மழையில் கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் தனியார் இடத்தில் இருந்த 50 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தூங்குமூஞ்சி மரம் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பகல் பொழுதில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அவ்வப்போது இரவு நேரத்தில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை திடீரென்று மழை பெய்தது.

மயிலாடுதுறை, குத்தாலம், மங்கைநல்லூர், செம்பனார்கோவில், ஆக்கூர், திருக்கடையூர், தரங்கம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடுதுறை நகரில் காற்றுடன் கூடிய கனமழை அரை மணி நேரம் நீடித்தது.

இந்த மழையால் மயிலாடுதுறையில் கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் தனியார் இடத்தில் இருந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது.

மரத்தின் கிளைகள் சாலையை அடைத்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த மின்சாரத் துறையினர் மின் இணைப்பை துண்டித்தனர்.

தொடர்ந்து மயிலாடுதுறை தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி கல்லூரிகள் விட்ட நேரத்தில் மழை பெய்ததால் வீட்டிற்கு செல்லும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

What do you think?

மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

திண்டிவனம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய 50ம் ஆண்டு ஆடித்திருவிழா மாரியம்மன் அலங்காரம்