டாஸ்மாக் கடை எதிர்ப்பு, இஸ்லாமியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
பெருந்தோட்டம் பள்ளிவாசல் மற்றும் பெண்கள் மதரசா அருகே, டாஸ்மாக் கடை திறப்பதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இஸ்லாமியர்கள் மனு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பெருந்தோட்டம் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த கடை அமைய உள்ள இடத்திற்கு அருகே, ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்துள்ளது, மேலும் முழுக்க பெண்கள் பயிலும் பெண்கள் மதரஸா, இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் மற்றும் இந்து ஆலயங்கள் அமைந்துள்ளன.

விதிமுறைகளை மீறி அமைக்கப்படும் டாஸ்மாக் காரணமாக தங்கள் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட முடியாத நிலைமை ஏற்படும் என்றும், கிராமத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைய உள்ள டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, இஸ்லாமியர்கள் ஊர் நாட்டான்மை பஞ்சாயத்தார்கள் முக்கியஸ்தர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அப்போது அவர்கள் எச்சரித்தனர்.

