in

அரசு கலைக் கல்லூரிக்குள் புகுந்த புள்ளி மானை பத்திரமாக மீட்டு காட்டில் விட்ட வனத்துறையினர்


Watch – YouTube Click

அரசு கலைக் கல்லூரிக்குள் புகுந்த புள்ளி மானை பத்திரமாக மீட்டு காட்டில் விட்ட வனத்துறையினர்

 

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து 2668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி அஷ்ட லிங்கங்களை வழிபட்டு கிரிவலம் வருகின்றனர்.

14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் அரசு கலைக் கல்லூரி முதல் பச்சையம்மன் கோயில் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனப்பகுதியை ஒட்டி கிரிவலப் பாதை அமைந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான இந்த வனப்பகுதியில் மான், மயில், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, உடும்பு, பல்வேறு வகையான பறவை வகைகள், குரங்குகள், மலை குரங்குகள், காட்டு குரங்குகள் என பல்வேறு வகையான குரங்கு வகைகள் வாழ்ந்து வருகின்றன.

ஆயிரக்கணக்கான மான்கள் இந்த அடர் வனப்பகுதியில் வசித்து வரும் நிலையில் வனப்பகுதிகளில் போதுமான உணவு குடிநீர் இருந்தும் கிரிவலப் பாதை ஓரங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே மான்கள் இயற்கையாக வருவதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மான்களை கண்டவுடன் அதற்கு பல்வேறு வகையான உணவு வகைகளை வழங்குவதால் அதனை சாப்பிடுவதற்காக தினம்தோறும் கிரிவலப் பாதையை ஒட்டி பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மான்கள் வேலியை ஒட்டியே காத்துக் கிடக்கின்றன.

இந்நிலையில் இன்று காப்பு காட்டுப் பகுதியில் இருந்து புள்ளிமான் திருவண்ணாமலை கலைஞர் அரசு கலைக் கல்லூரி வகுப்பறைக்குள் புகுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் கலைஞர் அரசு கலைக் கல்லூரிக்கு வந்து புள்ளி மானே பத்திரமாக வகுப்பறையில் இருந்து மீட்டு மீண்டும் அண்ணாமலை காப்பு காட்டு பகுதியில் அவிழ்த்து விட்டனர்.

கல்லூரி வகுப்பறையினுள் மான் புகுந்த சம்பவம் மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Watch – YouTube Click

What do you think?

அக்கட தேசத்தில் நம்பர் ஒன் நடிகராவேன்…. சூறாவளியாக சுற்றும் சூர்யா…

திருவாரூரில் நடைபெற்ற கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் 2 நாசிக் டோலை கிழித்த இசைக் குழுவினர்