in

திருவாரூரில் நடைபெற்ற கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் 2 நாசிக் டோலை கிழித்த இசைக் குழுவினர்


Watch – YouTube Click

திருவாரூரில் நடைபெற்ற கலைச்சங்கமம் நிகழ்ச்சியில் 2 நாசிக் டோலை கிழித்த இசைக் குழுவினர்

 

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு கலைச் சங்கமம் நிகழ்ச்சி தெற்கு வீதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாட்டுப்புறப் பாடல் நையாண்டி மேளம் கரகாட்டம் கருப்பசாமி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் பள்ளி வாயிலில் தஞ்சாவூர் சோழன் பிளாஸ்ட் நாசிக் குழுவினர் வட மாநிலங்களில் இசைக்கப்படும் நாசிக் டோல் என்கிற டோலை வாசித்தனர். அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பல்வேறு கிராமிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மீண்டும் நாசிக் டோல் இசைக்கப்பட்டது. அதில் தஞ்சை குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் வெறித்தனமாக நாசிக் போலை வாசித்து மிரள வைத்தனர். இந்த நிகழ்சியின் இறுதியில நாசிக் டோல் வாசித்த போது இரண்டு மத்தளங்கள் கிழிந்து தொங்கின. அதையும் பொருட்படுத்தாமல் ஒரு பக்கத்தில் அடித்தும் மத்தளத்தின் மேற்பகுதியில் அடித்தும் அக குழுவினர் வாசித்தனர்.

இந்த நாசிக் டோல் பொதுவாக வட மாநிலங்களில் வாசிக்கப்படுகிறது. சென்னை மதுரை போன்ற இடங்களில் இந்த நாசிக் டோல் குழுவினர் இருப்பதாகவும் தஞ்சாவூரை பொறுத்தவரை இக்குழுவினர் யூடியூப்பை பார்த்து கற்றுக்கொண்டு தாங்களாகவே வாசிக்க ஆரம்பித்து தற்போது வாசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு போதிய அளவு விளம்பரம் செய்யப்படாத காரணத்தினால் கூட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

அரசு கலைக் கல்லூரிக்குள் புகுந்த புள்ளி மானை பத்திரமாக மீட்டு காட்டில் விட்ட வனத்துறையினர்

பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்