இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் முத்தரசன் வேண்டுகோள்
காவிரி நீர் பிரச்சனையில் தமிழக அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் முத்தரசன் வேண்டுகோள்
மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடவேண்டுமென்று சட்டமன்றத்தில் தீர்மானம் அனைத்து கட்சியினரும் ஒருமித்த கருத்தில் நிறைவேற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தின் அனைத்து பிரச்னைகளிலும் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாக காவிரிநதிநீர் பிரச்சனை உள்ளது. காவிரிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி கர்நாடகம் மாதவாரியத்தர வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. அந்த தண்ணீரை பெறகூட முடியாத நிலை தமிழகத்தில் உள்ளது
கர்நாடகாவில் யார் ஆட்சி செய்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர்தருவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்த வேண்டுமென்று கர்நாடகா நினைக்கிறது.177 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கிடைக்காமல் செய்யவும் வகையில் மேகேதாட்டில் அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கிறது
இந்த அணை கட்டப்பட்டால் அங்கு 67 டிஎம்சி தண்ணீர் தேக்கப்படும்.தமிழ்நாடு பாளைவனமாகும்.தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்கள் குடிநீருக்காக காவிரிநீரை நம்பித்தான் உள்ளதுமத்திய அரசு நடுநிலையாக செயல்படாமல் கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றுபட்ட நிலையை மேற்கொள்கிறார்கள்.
தமிழ்நாடு பிளவு பட்டு கிடக்கிறது இந்த பிரச்னையில் ஒருமனதான முடிவு எட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும். அதற்காத்தான் அனைத்துகட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று தமிழக முதல்வரை வலியுறுத்தினோம். ஆனால் அமைச்சர் அனைத்துகட்சி கூட்டம் தேவை இல்லை என்று கூறுவது ஏற்புடையதல்லை
ஒத்தகருத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். நூறுநாள் வேலைதிட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது மகிழ்ச்சி ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்த அறிவிப்பு இல்லை
தற்போதுள்ள பயிர்காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் விவசாயிகள், அரசு இரண்டையும் ஏமாற்றுகின்றனர். விவசாயிகள் மீது அக்கறை இருக்குமேயானால் பயிர்காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்தினால்தான் விவசாயிகளுக்கு பயன் கிடைக்கும். தொகுதி மறுவரையில் மோடி அரசு சூழ்ச்சி செய்கிறது.
பாராளுமன்றத்தில் தற்போதுள்ள 543 எம்.பி.கள் பேசுவதற்கே 2 நிமிடம், அரைநிமிடம் என்றுதான் பேச நேரம் அளிக்கப்படுகிறது.எம்.பி. எண்ணிக்கை அதிகரிக்க நோக்கம் என்ன. ஒரேநாடு ஒரே கட்சி ஆட்சி என்பதற்கான சூட்சமம்.ஏப்ரல் மாதம் மசோதா கொண்டுவந்தபோது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் முயற்சியில் மசோதா நாடாளுமன்றத்தில் வந்தபோது தோற்கடிக்கப்பட்டது.ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு பாஜக பிறகட்சிகளை உடைத்து 850 எம்.பி. இடங்களாக உயர்த்த ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.
இது நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. பல்வேறு மசோதாக்களை தனக்கிருக்கும் பெரும்பான்மையால் நிறைவேற்றிகொள்கிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நோக்கம், லட்சியத்தை இந்தியாவில் அமல்படுத்த ஒன்றிய அரசு மேற்கொள்கிறது அதன் ஒருபகுதிதான் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்த்த முயற்சிக்கிறது அனைத்து கட்சிகளும் எதிர்த்து நிற்க வேண்டும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. தமிழக அரசு நெல்,கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்த்தி வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளித்தாலும் தவெக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல் உயர்த்தவில்லை. தற்போது நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தியது ஏற்புடையது அல்ல என்றார்.உடன் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.


