ஆதிகேசவப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிசேகம்
குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் மிக பழமையான செங்கமலத் தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிசேகம் ; ஆயிரக்கனக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனக் கோஷங்களை எழுப்பி பெருமாளின் அருளை பெற்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மாதிரிமங்கலம் கிராமத்தில் மிக பழமை வாய்ந்த செங்கமலத் தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோயில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு புனரமைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கடங்களை யாகசாலையில் வைத்து, பட்டாச்சாரியார்கள் யாக குண்டம் அமைத்து வேத மந்திரங்கள் ஓதி மூன்று கால பூஜை நடைபெற்றது.

இன்று மூன்றாம் கால பூஜை முடிவில் பூர்ணாஹூதி செய்து தீபாரதனை நடைபெற்றது. பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார் தலையில் சுமந்து வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் கோபுர கலசங்களை சென்றடைந்தது.
பின்னர் பட்டாச்சாரியார் வேதங்களை ஓதி, கடங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
கும்பாபிசேகத்தை காண வந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனக் கோஷங்களை எழுப்பி பெருமாளின் அருளை பெற்றனர்.

