in

வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

 

1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்...

சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் மேல்சோழங்குப்பம் கிராமத்தில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோயில் 50 ஆண்டுகள் கழித்து இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நேற்று காலை முதல் பல்வேறு கால யாக பூஜைகள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை கடம் புறப்பட்டு கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் வீரலூர், காந்தபாளையம், ஆதமங்கலம் புதூர், நவாப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார் கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

 ஸ்ரீ ராகவேந்திர சுவாமி 355-வது ஆராதனா மஹோத்சவம்

ஆதிகேசவப் பெருமாள் ஆலய மஹா கும்பாபிசேகம்