ஆடி கிருத்திகையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!
ஆடி கிருத்திகையொட்டி 401 பால் குடம் மற்றும் 201 காவடி ஏந்தி மாட வீதியில் வலம் வந்து சுப்பிரமணியரை வழிபட்ட பக்தர்கள்…..

ஆடி கிருத்திகையொட்டி 401 பால் குடம் மற்றும் 201 காவடி ஏந்தி நான்கு மாட வீதியில் வலம் வந்து சுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை நகரில் பழமை வாய்ந்த வட வீதி சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கிருத்திகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் இன்று ஆடி கிருத்திகை என்பதால் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் மற்றும் பெண்கள் சுப்பிரமணியர் கோவிலில் இருந்து 401 பால் குடம் மற்றும் 201 பால் காவடி, பன்னீர் காவடி, பூஷ்ப காவடி ஏந்தி நான்கு மாட வீதியில் வலம் வந்து சுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

