in

முதல் விமானப் பயணம் – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

முதல் விமானப் பயணம் – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

 

மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர்களை மதிப்பெண் சமத்துவ அடிப்படையில் தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அழைத்துசென்ற மதுரை மிட் டவுட் ரோட்டரி கிளப் அமைப்பினர் – விமான நிலையத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்த மாநகராட்சி மேயர்- முதன்முறையாக விமான பயணத்தை அனுபவித்த பள்ளி மாணவர்களின் எல்லையில்லா மகிழ்ச்சி.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் மதுரை மிட் டவுண் ரோட்டரி கிளப்பின் சார்பில் அதிக மதிப்பெண்கள் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக ஏழ்மையான குடும்ப பிண்ணனி கொண்ட மாணவர்களை ஏற்ற தாழ்வின்றி சமத்துவ அடிப்படையில் 12 மாணாக்கர்களை தேர்வு செய்து அவர்களை டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்திற்கு அழைத்துசென்றனர்.

மாணாக்கர்களுக்கு மிட்டவுண் ரோட்டரி கிளப் சார்பில் ஜவுளி கடைக்கு அழைத்துசென்று புதிய ஆடைகள், காலணிகள் வாங்கி கொடுக்கப்பட்டு இன்று காலை வாகனம் மூலமாக ஹாஸ்டல் மற்றும் வீடுகளில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு அழைத்துசெல்லப்பட்டனர்.

இந்த மாணாக்கர்களை ஒருங்கிணைத்து விமானம் மூலமாக அழைத்துசென்றபோது மதுரை மாநகராட்சி மேயர் நாகராஜன், மிட் டவுண் ரோட்டரி மாணவர் பயண திட்ட அதிகாரி சிவகுமார், மாநகராட்சி அதிகாரிகள், கல்விக்குழு தலைவர் மற்றும் மிட் டவுண் ரோட்டரி நிர்வாகிகள் கலந்துகொண்டு பூக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தனர்.

முதன்முறையாக விமான பயணத்தை மேற்கொண்ட மாநகராட்சி பள்ளி மாணாக்கர்கள் விமான நிலையத்திற்குசென்றபோதும் விமான இருக்கையில் அமர்ந்தபோதும் எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நாடாளுமன்றத்தை தொடர்ந்து டெல்லியில் முக்கிய அலுவலகங்கள், சுற்றுலா பகுதிகளையும் மாணாக்கர்கள் பார்வையிடுவதற்கான திட்டமிடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

What do you think?

வல்லக்கோட்டை முருகன் கோயில் ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகையில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!