in

புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சரின் யமஹா பைக்


Watch – YouTube Click

புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சரின் யமஹா பைக்

 

புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சரின் யமஹா பைக். இன்பம், துன்பம் உற்ற நண்பனாய் இருந்த தனது பைக்கை ஆசையாய் பார்த்து மகிழ்ந்த முதலமைச்சர் ரங்கசாமி.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி யமஹா பைக் பிரியர். சிறு வயது முதலே யமஹா பைக் மீது ஆர்வம் கொண்டவர். தன்னுடைய யமஹா பைக்கில் தான் டென்னிஸ் விளையாடுவதற்கு செல்வார் மற்றும் புதுச்சேரி முழுவதும் தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்கும் செல்வார். வேளாண் துறை அமைச்சராக இருந்த போதும், முதல் அமைச்சராக இருந்த போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும், அவர் யமஹா பைக்கில் தான் செல்வார்.

அதேபோல் தொகுதி மக்களை யமஹா பைக்கில் சென்று சந்திப்பது அவரது வழக்கம். பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தும் எளிமையாக இரு சக்கர வாகனத்தில் உலா வந்தது பொதுமக்கள் மற்றும் சிறுவர்களிடையே மிகவும் எளிய மனிதராகவே இருந்தார். பழமையான இந்த பைக் பழுதடைந்தது காரணமாக முதலமைச்சர் பைக் 6 மாதங்களுக்கு முன் புதுப்பிக்க சென்னை கொண்டு செல்லப்பட்டது.

இந்த பைக் சர்வீஸ் முடிந்து நேற்று முதலமைச்சர் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. புத்தம் புதிதாக பொலிவாக காணப்படும் தனது பைக்கை முதலமைச்சர் ஆசையுடன் தொட்டுப் பார்த்து ரசித்தார். அதனை ஸ்டார்ட் செய்தும் யமஹா பைக் சவுண்டையும் ரசித்தார்.

இன்பம் துன்பம் என எல்லாவற்றிற்கும் தனது உற்ற நண்பனாக முதலமைச்சர் ரங்கசாமியுடன் இருந்து வரும் இந்த பைக் தற்போது புது பொலிவுடன் முதலமைச்சர் வீட்டிற்கு வந்திருக்கும் யமஹா பைக்கை காண்பதற்கு அவரது ஆதரவாளர்கள் நேற்று வீட்டில் கூடியிருந்தனர்..


Watch – YouTube Click

What do you think?

வங்கிப் பெண் ஊழியரை கடத்திய கந்துவட்டி கும்பல்

காணாமல் போன செல்லப்பிராணி ரூ. 10 ஆயிரம் சன்மானம் அறிவித்த உரிமையாளர்