in

சவுக்கு சங்கர் அதிரடி கைது


Watch – YouTube Click

சவுக்கு சங்கர் அதிரடி கைது

 

பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சங்கரை, கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து, கோவை அழைத்து வருகின்றனர்.

அரசியல் விமர்சகர் மற்றும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக தனது சவுக்கு ஊடகத்தின் மூலம் திமுக அரசின் செயல்பாடுகளையும், மு.க.ஸ்டாலின், உதயநிதியை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், சவுக்கு சங்கருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் @SavukkuMedia ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்.

ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைகளுள் வைத்துக்கொண்டு, தான் ஏதோ நல்லாட்சி வழங்குவது போல ஒரு பொய் பிம்பத்தை உருவாக்கி, அந்த மாய உலகத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் திளைத்துக் கொண்டிருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

அதனையும் மீறி சில ஊடகங்கள் இந்த விடியா ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் அம்பலபடுத்தினால், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை ஏவி பொய் வழக்குகளால் முடக்க முயற்சிப்பது திமுகவிற்கே உரித்தான அராஜக பாசிச குணம்.

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட்டு, மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிசெய்யுமாறு விடியா அரசின் முதல்வரை வலியுறுத்துவதாக” தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் என அறியப்படும் ஆச்சிமுத்து சங்கர், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவர்.

2008ம் ஆண்டு இரண்டு அதிகாரிகளுக்கு இடையிலான தொலைபேசி உரையாடலின் குரல் பதிவை ஊடகங்களுக்கு கசியவிட்ட விவகாரத்தில் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். 2010ஆம் ஆண்டு சவுக்கு என்கிற தமிழ் செய்தி இணையதளத்ததை நிறுவி, தீவிரமான சர்ச்சைக்கு இடமான கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய வந்த சவுக்கு நெட் என்ற இணையதளத்தில் பிறரை புண்படுத்தும் உள்ளடக்கங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி. செல்வம் அதற்கு தடை விதித்தார். பிரபல யூடியூப் பக்கங்களிலும் அவர் தொடர்ந்து அளித்து வந்த பேட்டிகள் சர்ச்சையையும் விவாதத்தையும் தூண்டின.


Watch – YouTube Click

What do you think?

பிரேசில் கனமழைக்கு 39 பேர் பலி

ஜோதிகா அரசியல் பிரவேசம்?