in

பிரேசில் கனமழைக்கு 39 பேர் பலி


Watch – YouTube Click

பிரேசில் கனமழைக்கு 39 பேர் பலி

 

பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இயற்கை எப்போ எப்படி மாறுகிறது என சொல்ல முடியாது. இந்தியாவின் பல மாநிலங்களில் வெயில் கொளுத்தி எடுத்து வரும் நிலையில், சமீபத்தில் துபாயில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அந்த வகையில், தற்பொழுது தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன, 24,000 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை 39 பேர் பலியான நிலையில், 70 பேரை காணவில்லை எனக் கூறப்படுகிறது.

அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலரை காணவில்லை என்பதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே, பென்டோ கோன்கால்வ்ஸ் நகரில் உள்ள இரண்டாவது அணையும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், அருகில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு அந்த நகர அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

நேபாள 100 ரூபாயில் இந்திய பகுதிகள் திடீர் சர்ச்சை

சவுக்கு சங்கர் அதிரடி கைது