in

லண்டன் மேயர் தேர்தலில் 40.5% வாக்குப் பதிவு


Watch – YouTube Click

லண்டன் மேயர் தேர்தலில் 40.5% வாக்குப் பதிவு

லண்டன் மேயர் பதவிக்கு இந்திய வம்சாவளி தருண் குலாதியும் ,பாகிஸ்தான் வம்சாவளி சாதிக் கானும் போட்டியிடுகின்றனர் லண்டன் மேயராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்சாவளியின் சாதிக் உள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை லண்டன் நகர மேயர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மீண்டும் சாதிக்கான் போட்டியிட்டார். இவரை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் தருண் குலாதி என்பவரும் போட்டியிட்டார்.

இது தொடர்பாக தருண் குலாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், லண்டன் மக்கள் பாதுகாப்புடன் வாழவும், உலகின் முன்னணி நகரமாக லண்டன் தொடர்வதை உறுதி செய்யவும், விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

லண்டன் மேயர் தேர்தலில் 40.5 % வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குகள் எண்ணப்பட்டு இன்று தேர்தல் முடிவு அறிவிக்கப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

T20 வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் ஆலோசனை

பச்சிளங்குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கூலித் தொழிலாளி