in

வேட்பாளரை தேர்வு செய்ய நடைபெற்ற கூட்டம்


Watch – YouTube Click

வேட்பாளரை தேர்வு செய்ய நடைபெற்ற கூட்டம்

 

நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய நடைபெற்ற கருத்து கேட்டு கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் மாநிலத் தலைமை வேட்பாளரை அறிவிக்கும் என முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி பேட்டி

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதிலும் வேட்பாளர்களை அறிவிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு கூட்டணி கட்சிகளுக்கான இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றிற்கு அவர்கள் போட்டியிடுவதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருப்பூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக ஒதுக்கி உள்ள நிலையில் நாகப்பட்டிணம் தொகுதிக்கான வேட்பாளரை தேர்வு செய்து மாநில தலைமைக்கு பரிந்துரைப்பதற்கான மாவட்ட நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவ புண்ணியம் பத்மாவதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்வு செய்து மாநில தலைமைக்கு பரிந்துரைப்பதற்கும் அது குறித்த கருத்து கேட்பதற்கும் இந்த கூட்டம் நடத்தப்பட்டதுஇந்த கூட்டம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாலை அதே கூட்டரங்கில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்திலும் இது குறித்து விவாதம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் உடன்பாடு ஏற்படவில்லை என்றும் இறுதி முடிவை மாநில தலைமை எடுத்து வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என்றும் கூட்டத்தின் முடிவில் முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மீண்டும் ராஷ்மிகா மந்தனா வீடியோ …..அதிர்ச்சியில் சினி வட்டாராம்

நெல்லையப்பர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது