in

திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்


Watch – YouTube Click

திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

 

திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றவில்லை என்று கூறி திமுக அலுவலகத்தில் சென்று மனு அளித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மயிலாடுதுறையில் பரபரப்பு

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்பட்டு விட்டது.

அதன் பின்பு 11 ஆண்டுகளாக விடுபட்டவர்களுக்கு பணியிடங்கள் வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறு நியமனத் தேர்வு நடத்தப்படாமல் ஏற்கனவே வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும் என்று திமுக தெரிவித்து இருந்தது.

ஆனால் மறு நியமன தேர்வு அரசாணை 149 தி மு க அரசு நிறைவேற்றி உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில் உள்ள ஆசிரியர்களும் மீண்டும் மறு தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுகவை கண்டித்து கையில் பதாகைகளை ஏந்தி மயிலாடுதுறை திமுக அலுவலகத்திற்குச் சென்ற தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அங்குள்ள நிர்வாகிகளிடம் மனு அளித்தனர்.

எங்களிடம் எதற்கு மனு கொடுத்தீர்கள் என்று அவற்றை திமுக நிர்வாகிகள் பெற மறுத்தனர் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தீவிர பிரச்சாரம்

தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறக்கும் படையினர் அரசு கரூவூலகத்தில் ஒப்படைப்பு