in

பிறந்த நாள் கொண்டாடும் அமரன் சிவகார்த்திகேயன் இத்தனை கோடிக்கு அதிபதியா

பிறந்த நாள் கொண்டாடும் அமரன் சிவகார்த்திகேயன் இத்தனை கோடிக்கு அதிபதியா

எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பங்கு பெற்று அதன் பிறகு சினிமா துறையில் வாய்ப்பு கிடைத்து இன்று டாப் நடிகர்களுக்கு இணையாக நடிக்கிறார், நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன்.

இவர் சினிமா துறைக்கு வந்து 13 ஆண்டு ஆகிரத்து இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். தன் முதல் படமான மெரினாவிற்கு வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கிய அவர் இன்று கோடியில் சம்பளம் பெறுகிறார்

இவரின் தற்போதைய சம்பளம் 50 முதல் 60 கோடி வரை இருக்கும் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என்று பன்முகம் கொண்ட இவர் அனைத்து வகை ரசிகர்களாலும் விரும்பப்படுபவர்.

சிவகார்த்திகேயன் படம் என்றாலே குடும்பத்துடன் நம்பி’ படம் பார்க்க செல்லலாம் என்ற மதிப்பை பெற்ற நடிகர். இவர் சொத்து மதிப்பு 150 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இவருக்கு சென்னையில் சொந்த வீடுகள், ஆடி, பின் டபிள்யு, மினி கூப்பர் போன்ற சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவோம். எதிர் நீச்சல் போட்ட நல்ல வேலைக்காரனாக, மாவீரன் போல போரடி, ரசிகர்கள் மனதில் என்றும் டான், இவர் வீட்டின் சீமா ராஜா உழைப்பிற்கு அஞ்சாதவர்களே.. எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு செல்வர்…இதற்கு சிறந்த உதாரணம்… Siva..

What do you think?

பிப்ரவரி 23 செலிப்ரிட்டி கிரிக்கெட் லீகில் (CCL) தொடங்குகிறது… கேப்டன் ஆர்யா பேட்டி

நெல்லையில் நடைபெற்ற உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் கூட்டம்